பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டனின் தங்கை பிப்பா மிடில்டன், பாரிசில் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் கனைவி கேத் மிடில்டன். இவரது தங்கை பிப்பா மிடில்டன்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த பேஷன் டிசைன் நிகழ்ச்சிக்காக பிப்பா சென்றுள்ளார். அங்கு காரில் 3 ஆண் நண்பர்களுடன் காரில் பாரிசை சுற்றி பார்த்துள்ளார்.

இதை அறிந்து கமெராமேன்கள் அவர்களை புகைப்படம் எடுத்தனர். அப்போது கார் டிரைவர் திடீரென கைத்துப்பாக்கியை எடுத்து ஒரு கமெராமேனை மிரட்டி உள்ளார்.

இதை காரில் இருந்த பிப்பா மற்றும் 3 ஆண் நண்பர்கள் ரசித்து சிரித்துள்ளனர். இதனால் கமெராமேன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சன் பத்திரிகையில் பரபரப்பாக செய்தி வெளியானது.

புகாரின் அடிப்படையில் பிப்பாவிடம் பிரான்ஸ் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரான்சில் பொது இடத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டுவது கடும் குற்றம். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை வழங்கப்படும்.

கமெராமேனை மிரட்டிய புகாரில் பிப்பாவுக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அவரை கைது செய்வோம் என்று பிரான்ஸ் பொலிசார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் மேலும் கூறுகையில், கமெராமேனை உண்மையான துப்பாக்கியால் மிரட்டியது தெரிந்தால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். போலி துப்பாக்கியாக இருந்தாலும் கூட 2 ஆண்டு வரை தண்டனை வழங்கப்படும் என்றனர்.