முஸ்லீம்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் காட்டப்படும் பாரபட்சம் குறித்து Amnesty International அளித்த Choice and Prejudice என்ற அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் முஸ்லீம் மக்கள் வேறுபாட்டுணர்வுடன் நடத்தப்படுகின்றனர் என்பதை இந்த அறிக்கை சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளது.

முக்காடு, தாடி மசூதி போன்ற எதுவும் கூடாது என்பதுடன் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முஸ்லீம்கள் இனவேறுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர். ஐரோப்பா முழுவதும் முஸ்லீம்கள் குறித்து ஒரே மாதிரியான, தவறான எண்ணங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இனபேதம் குறித்த சுவிஸ் மத்திய ஆணையத்தின் தலைவரான மார்டினா புரூன்ஸ்விக் கிராஃப் இந்த அறிக்கையை வரவேற்றுள்ளார்.

இந்த ஆணையம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இனபேதச் சட்டங்களில் உள்ள இடைவெளிகளை நிரப்ப பல ஆலோசனைகளை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.