தமிழில் இருந்து இந்திக்கு சென்று முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பட்டையைக்கிளப்பும் நடிகை அசின், தற்போது புதிதாக நடனம் ஒன்றையும் கற்றுக்கொண்டிருக்கிறார் என்பதுதான் பாலிவுட்டில் லேட்டஸ்டாக கிசுகிசுக்கப்படும் ஒரு செய்தி.

அதாவது நட்சத்திர ஓட்டல்களில் ஆடும் வால்ட்ஷ் என்ற நடனத்தையும் அசின் கற்க துவங்கியுள்ளார். மேற்கத்திய நடனத்தையும், கிராமிய நடனத்தையும் வைத்து இந்த வகை நடனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை சினிமாவில் ஆடுவது இல்லை. நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் விருந்துகளில் ஆண்களும், பெண்களும் இணைந்து வால்ட்ஷ் நடனங்களை ஆடுவது உண்டு.

இவ்வகையான நடனத்தை அசின் கற்பது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாம். பொதுவாக இந்தி நடிகர், நடிகைகள் அடிக்கடி பார்ட்டிகளுக்கு செல்வது உண்டு. உச்சக்கட்டமாக அவர்கள் ஒருவருக்கொருவர் கை கோர்த்து வால்ட்ஷ் நடனங்கள் ஆடுவது உண்டு.

இந்த நடனம் தெரியாததால் அசின் தனிமை படுத்தப்பட்டார். இருக்கையில் அமர்ந்தபடியே அவர்களை பார்த்தார். அந்த நடனத்தை கற்று தானும் அது போல் ஆட வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு ஏற்பட்டது. எனவே தான் நடனத்தை கற்று வருகிறார்.