எங்களுக்கோ அல்லது எங்கள் கணவர்மார்களின் குடும்பத்தாருக்கோ ஏதாவது ஆனால் அதற்கு எங்கள் தாய் முத்துலட்சுமி தான் காரணம் என்று சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தன கடத்தல் வீரப்பன், முத்துலட்சுமி தம்பதிக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்தவரான வித்யாராணி சென்னையில் படிக்கும்போது கல்லூரி மாணவரான மரிய தீபக் என்பவரை காதலித்தார். இதற்கு முத்துலட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவர் தனது தாயின் எதிர்ப்பையும் மீறி சென்னையில் உள்ள ஒரு சர்ச்சில் தீபக்கை திருமணம் செய்து கொண்டார். அவரது தங்கை விஜயலட்சுமி தலித் சமூகத்தைச் சேர்ந்த சண்முகராஜன் என்பவரை காதல் திருமணம் செய்தார்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நாங்கள் காதலி்தது திருமணம் செய்து கொண்டது எங்கள் தாய்க்கு சிறிதும் பிடிக்கவில்லை. அதனால் எங்களை கணவரை விட்டு பிரிந்து வந்துவிடுமாறு எங்கள் தாய் மிரட்டி வருகிறார். அதனால் எங்களுக்கோ அல்லது எங்கள் கணவன்மாரிகளின் குடும்பத்தாருக்கோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எங்கள் தாய் முத்துலட்சுமி தான் காரணம் என்றனர்.