நடிகர் ஆர்யா - நடிகை அனுஷ்கா நடித்து வரும் இரண்டாம் உலகம் படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் நடைபெற உள்ளது. இதற்காக படக்குழு ஜோர்ஜியா புறப்பட்டு செல்கிறது.

ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல சுமார் 65 நாட்கள் ஜோர்ஜியாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்வதற்காக கடந்த வாரமே படத்தின் இயக்குநர் செல்வராகவன் ஜார்ஜியா சென்றுவிட்டார். ஜுன் மாத இரண்டாம் வாரத்தில் படக்குழுவினர் புறப்பட்டுச் செல்வார்கள் என்று தெரிகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் உருவாக உள்ள இப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. மிகச் சிறந்த காதல் கதையுடன் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஆர்யா மற்றும் அனுஷ்கா இருவருக்குமே இரட்டை வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.