இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகர் விஜயை வைத்து ஒரு புதுப் படமொன்றை இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு ´தலைவன்´ எனப் பெயரிடப்பட்டிருந்தது.

ஆனால், இப்படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் பொருத்தம் இல்லை என்று கூறியுள்ள இயக்குனர், விரைவில் ´தலைவன்´ படத்திற்கு வேறு புதிய தலைப்பை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏ.எல்.விஜய் முன்பு இயக்கிய ´தெய்வத்திருமகள்´ படத்திற்கு முதலில் தெய்வத்திருமகன் என்றும் பின்னர் தெய்வமகன் என்றும் பெயர் மாற்றம் செய்தார். கடைசியாக அவர் தெய்வத்திருமகள் என்ற தலைப்பில் படத்தை வெளியிட்டார்.

இந்த சென்டிமெண்ட் காரணமாக ´தலைவன்´ படத்தின் தலைப்பையும் இவர் மாற்றுகிறார் என்று இயக்குனரின் நெருக்கமான தரப்பு தகவல் வெளியிட்டிருக்கிறது.