பிரான்சில் மிகப்பெரிய அளவிலான கள்ளப்பணப் பதுக்ககம் காவற்துறையினரால் கைப்பற்றப் பட்டுள்ளது. பிரான்சில் முதன்முறையாக இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றப்ட்டுள்து. MEAUX-CHELLES ற்கும் இடையிலுள்ள கிராமமொன்றில் செவ்வாய்கிழமை சட்டவியற் காவற்துறையினர் முற்றுகை நடத்தியுள்ளனர்.

இந்த முற்றுகையில் 9 மில்லியன் யூரோக்ள் 3'50'000கள்ளத் தாள்களில் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் செய்தி காவற்துறையினரால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது பிரான்சில் கைப்பற்றப்பட்ட முதலாவது பெரிய தொகையும் ஐரோப்பாவில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது பெரிய தொகையாகும்.

இது MEAUX இற்கும் CHELLES ற்கும் இடையிலுள்ள கிராமமொன்றிலுள்ள சிறிய தொழிற்சாலை ஒன்றிலிருந்தே கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளப் பணத்திற்கு எதிரான மத்திய அலுவலகமும் OCRFM பரிசின் விசேட பிராந்திய நீதித்துறையும் (a Juridiction interrégionale spécialisée (Jirs) de Paris) இணைந்து கள்ளப்பண முற்றுகையைச் செய்தனர்.

இக் கள்ளப்பண விவகாரம் ஜரோப்பிய அளவில் «EUA-0020C00045» மற்றும் «EUA-0050C00067» இலக்க வழக்குகளில் 2007ம் ஆண்டிலிருந்து கள்ளப்பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கள்ளப் பண வலையமைப்பினை சேர்ந்த பலர் பரிசிலும் சிறிய வெளிப்புறக் கிராமங்களிலும் கைது செய்ப்பட்டுள்ளனர்.

இதில் பல்லாயிரக் கணக்கில் 20 யூரோ கள்ளத் தாள்களும் 50 யூரோ கள்ளத் தாள்களும் பெருமளவில் புழக்கத்தில் உள்ளதாக OCRFM எச்சரித்துள்ளது. ஜரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் பெருமளவு கள்ளப் பணத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட் 30 இலிருந்து 40 வரையான சிறிய கள்ளப்பணத் தயாரிப்பாளர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

ஆனாலும் முதற் தடவையாக இம் முறையே பெருமளவான பணமும், பணம் அச்சடிக்கும் கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே பணமாக யாரிடமும் பெறும் போது பெரும் எச்சரிக்கை அவசியமாகின்றது.