சக்ரி டோலட்டி இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் பில்லா 2 திரைப்படம் தற்போதைக்கு வெளியாகாது என்பதால், தனியாக வெளிவர இருக்கும் உற்சாகத்தில், 450 தியேட்டர்களுக்கும் மேல் திரையிடப்படுகிறது.

2 நாட்களில் வெளிவர இருக்கும் கார்த்தியின் சகுனி, இதே பெயரில் தெலுங்கிலும் தயாராகி இருக்கிறது. அந்த வகையில் இது கார்த்திக்கு முதல் தெலுங்குப் படமாகும்.

சகுனி படம் ஜூன் 22 என அறிவிக்கப்பட்டதும், 21-ம் தேதியே பில்லா 2 வெளியாகும் என்று கூறப்பட்டது. தியேட்டர்கள் முன்பதிவுக்கான வேலைகளை ஆரம்பித்த நிலையில், திடீரென்று சென்சார் பிரச்சினையில் சிக்கிக் கொண்டது பில்லா 2. பட வெளியீடு இந்த மாத இறுதியிலா… அடுத்த மாதமா என்று தெரியாத நிலை.

இது சகுனிக்கு ரொம்ப சாதகமாக அமைந்துள்ளது. தமிழில் சோலோ ரிலீசாகக் களமிறங்கும் இந்தப் படத்துக்கு இதுவரை 450 திரையரங்குகள் ஒப்பந்தமாகியுள்ளன. இதற்கு முன் கார்த்தி என்ன… சூர்யாவின் படமே தமிழகத்தில் இத்தனை அரங்குகளில் வெளியாகியிருக்குமா என்பது சந்தேகம்!

தியேட்டர்காரர்கள் பெரிய தொகையை மினிமம் கேரண்டியாகத் தந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் ஒரு காம்ப்ளெக்ஸ் மட்டுமே ரூ 30 லட்சத்தை இந்தப் படத்துக்குக் கொடுத்துள்ளதென்றால் சகுனி விற்பனையைப் பார்த்துக் கொள்ளுங்கள்!