http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-ahlan%20(8).jpgயேர்மனி Aalen நகரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இளையோர்களுக்கான இசை விழாவில் " DOUBLE-A-FESTIVAL 2012 " பல்தரப்பட்ட புலம்பெயர் மக்களுக்கான அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வில் Aalen தமிழ் மக்கள் ஈழத்தமிழர்களின் இனவழிப்பை எடுத்துக்காட்டும் முகமாக "21  ஆம்  நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை" மற்றும் இலங்கையில் கொலைக்களம்" ஆகிய ஆவணங்களை திரையிட்டனர் .

"21  ஆம்  நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை" எனும் காணொளி ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதி செல்வன் கோகுலன் அவர்களின் தயாரிப்பில் யேர்மன்  மொழியில் உருவாக்கப்பட்டது . 

காலநிலை சீராக இல்லாத நிலையிலும்  இவ் நிகழ்வில் கலந்து கொண்ட யேர்மனிய மக்கள் தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு மேற்கொள்ளும் இனவழிப்பை அறிந்து கண்ணீர் சிந்தியதோடு தமிழ் மக்களுக்கான ஆதரவையும் தெரிவித்தனர் . அத்தோடு Aalen  தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஈழத்தமிழர்களின் தற்காலிக நிலைமைகளையும் சுட்டிக்காட்டியதோடு ஏனைய தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினார்கள் .

Aalen தமிழ்  மக்கள் பல்வேறு நிகழ்வுகளில் யேர்மனிய மக்களுடன் இணைந்து தமிழின அடையாளத்தை வெளிப்படுத்தும் முகமாக பங்குகொள்வது இங்கு குறிப்பிடத்தக்கது .http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-ahlan%20(7).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-ahlan%20(6).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-ahlan%20(5).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-ahlan%20(4).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-ahlan%20(2).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-ahlan%20(3).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-ahlan.jpg

நன்றி
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி